Categories
உலக செய்திகள்

தடுப்பூசி தட்டுப்பாடு…. மீண்டும் கட்டுப்பாடால்…. ஐரோப்பா குழப்பம்….!!

தடுப்பூசிகள் தட்டுப்பாட்டால் ஐரோப்பிய நாடுகள் அதனை வாங்குவதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. 

ஐரோபிய கண்டத்திலேயே பிரிட்டன் அரசாங்கம் தான் முதன்முதலில் கொரோனோ தடுப்பூசியை வழங்க அனுமதியளித்திருந்தது.எனினும் தற்போது வரை சுவிட்சர்லாந்து, பிரான்ஸ் ஜெர்மனி ஆகிய நாடுகள் தடுப்பூசி வாங்குவதற்கு தயாராகவில்லை. இந்நிலையில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் விரிவான திட்டத்திற்கு ஒன்றிணைய மறுத்ததாக பிரிட்டனை ஐரோப்பிய தலைவர்கள் சாடியுள்ளனர். ஆனால் ஐரோப்பாவின் பல நாடுகள் தங்களுக்கு தடுப்பூசி கிடைக்க தாமதம் ஏற்படுவதாக வருத்தத்தில் உள்ளனர்.

இதைத்தொடர்ந்து பிரிட்டன் அரசாங்கம் விரைவாக நடவடிக்கை எடுத்த காரணத்தினால் தங்களுக்கு தேவையான தடுப்பூசிகளை கைப்பற்றியுள்ளனர். இதனால் பெல்ஜியம் நாங்கள் ஏமாற்றப்பட்டுள்ளோம் என்று கூறியுள்ளது. இந்நிலையில் ஜெர்மன், ஐரோப்பிய ஒன்றியம் தாமதமாக செயல்பட்டு வருவதால் தாங்களே முடிவெடுக்கும் நிலையில் உள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.பிரிட்டன் அரசாங்கம் தடுப்பூசியை பல்லாயிர கணக்கான மக்களுக்கு வழங்கிவிட்டது.  இந்நிலையில் தற்போது தான் ஐரோப்பிய ஒன்றியம், தடுப்பூசிகளை  அனுமதிக்கவே ஆரம்பித்துள்ளது.

மேலும் இதனை பொதுமக்களுக்கு வழங்க வேண்டும் என்றால் அதற்கு மேலும் ஒரு வாரம் ஆகும் என்று கூறப்பட்டுள்ளது.இதற்கிடையில் பிரான்ஸ் அரசாங்கம் 100 மில்லியன் பைசர் தடுப்பூசிகளை ஒப்பந்தம் செய்துவிட்டது. இதனால் பெல்ஜியதிற்கு 200 மில்லியன் மட்டுமே கிடைக்கும் என்ற நிலைக்கு  தள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு தடுப்பூசி வாங்கும் விவகாரத்தில் ஐரோப்பிய ஒன்றியம் மிகவும் தாமதமாக செயல்பட்டிருந்ததால் ஐரோப்பாவின் மேலும் பல நாடுகள் இன்னும் ஒரு வருட காலம் கட்டுப்பாட்டு விதிமுறைகளுக்கு உட்பட்டு இருக்க வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது.

Categories

Tech |