தடுப்பூசி, தனிமைப்படுத்துதல் இவற்றைத் தாண்டி ஒமைக்ரான் தொற்று பரவியுள்ளது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்தியாவில் தற்போது பல மாநிலங்களில் கொஞ்சம் கொஞ்சமாக ஒமைக்ரான் தொற்று பரவி வர ஆரம்பமாகியுள்ளது. இந்நிலையில் ஹாங்காங்கில் கொரோனா பாதுகாப்பு ஏற்பாடுகள் மிகுந்த ஒரு ஹோட்டலில் இரு வேறு அறைகளில் எந்தவித தொடர்பு இல்லாமல் இருந்த இரண்டு டோஸ் தடுப்பு ஊசி செலுத்திய இருவருக்கு இடையில் ஒமைக்ரான் தொற்று பரவியிருப்பது ஆய்வாளர்களை திகைக்க வைத்துள்ளது.
இரண்டு பேரும் 24 மணிநேர சிசிடிவி கண்காணிப்பில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் காற்றின் மூலம் தொற்று பரவியுள்ளது. ஒமைக்ரான் அதன் பரவும் வேகத்தை காட்டியுள்ளது என்று ஆய்வாளர்கள் திகைத்துப் போயுள்ளனர் . இதனால் மக்களுக்கு தொடர்ந்து அச்சம் அதிகரித்து வருகின்றது.