பீகார் மாநிலத்தில் உள்ள அர்வால் மாவட்டத்தில் தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டது. இந்த பட்டியலில் பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியா, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா, உள்துறை மந்திரி அமித்ஷா மற்றும் பிரபல இந்தி நடிகர் அமிதாப்பச்சன் ஆகியோர் பெயர்கள் இடம் பெற்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த பட்டியலின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.இதையடுத்து பீகார் மாநில சுகாதார துறை அதிகாரிகள் தீவிர விசாரணை ஈடுபட்டனர். அப்போது ஆப்பரேட்டர் பிரவீன் குமார் மற்றும் வினய் குமார் ஆகிய இருவரிடமும் நடத்தப்பட்ட விசாரணையில், இது பற்றி தங்களுக்கு தெரியாது என்று கூறினர். இதையடுத்து இவர்கள் இருவரையும் சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என்று பீகார் மாநில சுகாதார துறை உத்தரவிட்டுள்ளது.