Categories
உலக செய்திகள்

தடுப்பூசி பெயர்களில் தயாரிக்கப்படும் கேக்கிற்கு… அமோக வரவேற்பு…!!

தடுப்பூசி பெயர்களின் தயாரிக்கப்படும் கேக்கிற்கு அமோக வரவேற்பு உள்ளதாக உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

உலக நாடுகளில் பல இடங்களில் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றது. கொரோனா தொற்றை ஒழிப்பதற்காக பல்வேறு முயற்சிகளுக்குப் பிறகு தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து தற்போது பயன்பாட்டிற்கு தடுப்பூசி கொண்டுவரப்பட்டுள்ளது. ஆனால் மக்கள் பலருக்கு தடுப்பூசியின் பெயர்கள் தெரியாது.

அவற்றை தெரியப்படுத்தும் விதமாக கொரோனா தடுப்பூசி பெயர்களில் தயாரிக்கப்பட்டுள்ள கேக் வகைகள் ஹங்கேரி நாட்டில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. பைசர், மார்டினா, அஸ்ட்ரா ஜெனிகிரா போன்ற பெயர்கள் இந்த கேக்களுக்கு சூட்டப்பட்டுள்ளது. நாட்டில் கிடைக்கும் தடுப்பூசிகளை மக்களுக்கு தெரிவிக்கும் வகையில் இந்த புது முயற்சியில் இறங்கியுள்ளதாக அந்த பேக்கரி உரிமையாளர் தெரிவித்தார்.

Categories

Tech |