நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு சில மாநிலங்களில் மக்களுக்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு தடுப்பூசி போடுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.அதன்படி மத்திய பிரதேச மாநிலத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் அரசு சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
அவ்வகையில் மத்திய பிரதேச மாநிலத்தில் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டு கொண்டதற்கான சான்றிதழ் இல்லாதவர்களுக்கு டிசம்பர் 31ம் தேதிக்கு பிறகு ரேஷன் பொருட்கள் கிடையாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசின் இந்த அறிவிப்பு மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.