தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வரும் நிலையில் அதை ஒழிக்க தடுப்பூசி ஒன்றே நிரந்தர தீர்வு என்பதால் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இதன் முதற்கட்டமாக 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டது. இதையடுத்து 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மக்கள் தடுப்பூசி போடுவதை ஊக்குவிக்கும் விதமாக 100 நாள் வேலை பார்க்கும் இடங்களில் தடுப்பூசி போட்டால் தான் வேலை என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் தடுப்பூசி போடாதவர்கள் 100 நாள் வேலை திட்டத்தில் வேலை பார்க்க முடியாது என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் நாகை, வேதாரண்யம் பகுதிகளில் நடைபெறும் தடுப்பு முகாம்களில் தடுப்பு ஊசி போட்டுக்கொள்ள மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. காலை முதல் நூற்றுக்கணக்கானவர்கள் தடுப்பூசி செலுத்தி வருகின்றனர்.