Categories
மாநில செய்திகள்

தடுப்பூசி போடவில்லையா…? வந்தது சிக்கல்…. மாவட்ட ஆட்சியர் கிடுக்குப்பிடி…!!!!

நாடு முழுவதும் கொரோனாவை முற்றிலுமாக ஒழிப்பதற்காக மாநில அரசுகள் தடுப்பூசி  போடும்  பணிகளை தீவிரப்படுத்தி வருகிறது. அந்தவகையில் தமிழகத்தில் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. வாரம் தோறும் மெகா தடுப்பூசி முகாம் அமைக்கப்பட்டு மக்களுக்கு இல்லம் தேடி சென்று தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் ஒரு சிலர் தடுப்பூசி போட்டுக்கொள்ளாமல் இருக்கின்றனர். இதற்கிடையில் ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு அச்சுறுத்தி வருகிறது.

இந்த நிலையில் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள், பொதுமக்கள் தடுப்பூசி போடுவதை ஊக்குவிக்கும்  விதமாக தடுப்பூசி போடாதவர்கள் பொது இடங்களுக்கு செல்ல தடை விதித்து வருகின்றனர். அந்த வகையில் நாமக்கல் மாவட்டத்தில் தடுப்பூசி போட்டு கொள்ளாதவர்களுக்கு தியேட்டர், வங்கிகள், கடைவீதிபொது இடங்களுக்கு செல்ல அனுமதி இல்லை என்று அம்மாவட்ட ஆட்சியர் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

Categories

Tech |