உலகம் முழுவதுமாக பல நாடுகளிலும் கொரோனாவை முற்றிலுமாக ஒழிக்க தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. ஆனால் மக்களிடையே தடுப்பூசி போடுவதற்கு பயமும் ஒருவித குழப்பமும் நீடித்துக் கொண்டே வருகிறது. இதன் காரணமாக ஒரு சிலர் மட்டுமே தடுப்பூசி போட்டுக் கொள்கின்றனர். இதனால் மக்களிடையே தடுப்பூசி போட்டுக் கொள்வதை ஆர்வப்படுத்தும் விதமாக ஒவ்வொரு நாட்டிலும் வித்தியாசமான முறையில் பரிசளித்து வருகின்றனர்.
இந்நிலையில் பிலிப்பைன்ஸ் நாட்டின் அதிபர் ராட்ரிகோ டுடேர்டெ தடுப்பூசி செலுத்தவில்லை என்றால் அவர்களுக்கு சிறைத்தண்டனை வழங்கப்படும் என்ற அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். மொத்தம் 11 கோடி பேர் கொண்ட அந்நாட்டில் 21 லட்சம் பேர் மட்டுமே தடுப்பூசி செலுத்திக் கொண்டது குறிப்பிடத்தக்கது.