நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு சில மாநிலங்களில் மக்களுக்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட தடுப்பூசி போடுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலம் தானே மாநகராட்சியில் தடுப்பூசி போடாதவர்களுக்கு மாநகரப் பேருந்துகளில் பயணம் செய்ய அனுமதி இல்லை என்று அம்மாவட்ட மேயர் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தியில்,மாநகராட்சி பேருந்துகளில் பயணம் செய்வதற்கு தடுப்பூசி போட்டதற்கான சான்றிதழ் அல்லது யுனிவர்சல் பாஸ் கட்டாயமாகும். ஒரு டோஸ் தடுப்பூசி கூட போடாதவர்கள் தானே மாநகராட்சி பேருந்துகளில் பயணம் செய்ய அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று அவர் கூறியுள்ளார். அதனைப் போலவே குஜராத் மாநிலம் சூரத்திலும் 2 டோஸ் தடுப்பூசி போடாதவர்கள் நாளை முதல் மாநகரப் பேருந்துகளில் பயணம் செய்ய அனுமதி இல்லை என்று மாநகராட்சி ஆணையர் அறிவித்துள்ளார்.