புதுவை மாநிலத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக முகாம்கள் மூலம் தடுப்புபூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனிடையில் தென்னாப்பிரிக்காவில் கொரோனா வைரஸ் ஒமிக்ரான் என்ற புதிய வைரசாக உருமாறி உலக நாடுகளை அதிர வைத்துள்ளது. இதனால் அனைத்து நாடுகளும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் சுகாதாரத்துறை இயக்குனர் ஸ்ரீராமலு வெளியிட்டுள்ள அறிக்கையில், புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கையான தடுப்பூசி செலுத்தும் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. எனவே தடுப்பூசி போடாதவர்கள் வெளியே செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அதையும் மீறி பொது இடங்களுக்கு செல்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.