நாடு முழுவதும் கொரோனா பெருந்தொற்று மக்களை அச்சுறுத்தி வந்தது. இதையடுத்து மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டனர். அதன் ஒரு பகுதியாக தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு தடுப்பூசி செலுத்துவதன் மூலம் கொரோனா தொற்றை கட்டுக்குள் கொண்டுவர முடியும். இதனால் தடுப்பூசி செலுத்தும் பணியானது தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் தடுப்பூசி போடாதவர்களே கொரோனா வைரஸ் உருமாறுவதற்கு காரணம் என்று நிபுணர்கள் கூறியதால்தான் தடுப்பூசியை கட்டாயமாக்கியுள்ளோம் என்று தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் வாதிட்டுள்ளது. தடுப்பூசி கட்டாயம் என்று பல மாநில அரசுகள் அறிவித்து இருப்பதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் வாதிட்ட தமிழக அரசு, மத்திய அரசின் அறிவுறுத்தலின் அடிப்படையில் தமிழகத்தில் 100 சதவீதம் தடுப்பூசி செலுத்தப்படுவது உறுதி செய்யப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.