உலகம் முழுவதுமாக கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு நடவடிக்கைகளை அரசுகள் எடுத்து வருகிறது. இதற்கு மத்தியில் இதை ஒழிக்க தடுப்பூசி ஒன்றே நிரந்தர தீர்வு என்பதால் தடுப்பூசி போடும் பணிகள் அனைத்து நாடுகளிலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தகுதி வாய்ந்த அனைவருமே கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று அரசு சார்பாக அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் பாகிஸ்தானில் தடுப்பூசி செலுத்தாதவர்களின் செல்போன் இணைப்பு துண்டிக்கப்படும் என்று அந்நாட்டு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஏற்கனவே தடுப்பூசி செலுத்தாதவர்களின் சம்பளத்தை நிறுத்த பாகிஸ்தான் ரயில்வே எடுத்த முடிவை தொடர்ந்து தற்போது சிம்கார்டு பிளாக் செய்யப்படும் என அறிவித்துள்ளது.