சென்னையில் கொரோனா முதல் தடுப்பூசி செலுத்துவோருக்கு வெள்ளிக்காசு, குக்கர், நான் ஸ்டிக் தவா, ஹாட் பாக்ஸ், மூன்று லிட்டர் சமையல் எண்ணெய் போன்ற பல்வேறு பரிசுகள் குலுக்கல் முறையில் வழங்கப்பட்டது. மாநகராட்சியின் இத்தகைய கவனம் ஈர்க்கும் செயலுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. தமிழகம் முழுவதும் நடைபெற்ற.
6 வது மெகா தடுப்பூசி முகாமில் பொதுமக்கள் ஆர்வத்துடன் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். சென்னை எழும்பூர் ரயில் நிலையம் அருகே பெருநகர சென்னை மாநகராட்சியுடன் இணைந்து தமிழக அரசின் உணவு பாதுகாப்பு துறை சார்பில் தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது. இதுபற்றி அதிகாரிகள் பேசுகையில், கடந்த வருடம் தமிழகத்தில் சென்னை தான் கொரோனா அதிகமாக பாதிக்கப்பட்ட மாவட்டமாக இருந்தது.
அதில் குறிப்பாக ராயபுரம் அதிகமான பாதிப்பு சதவிகிதத்தில் இருந்தது. தொடர் முயற்சியால் அந்த நிலை மாறி வருகிறது. மேலும் பரிசு பொருட்கள் கொடுப்பது என்பது மக்களின் ஆர்வத்தை தூண்டும் ஒரு சாதாரண முயற்சிதான். தற்போது மக்களுக்கு தடுப்பூசி போடுவதற்கும் ஆர்வம் வந்துள்ளது என்று கூறியுள்ளார்.