தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் தடுப்பூசி போடுவது ஒன்றே கொரோனவை ஒழிக்க நிரந்தர தீர்வு ஆகும். இதனால் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
மக்கள் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறு முதல்வர் வேண்டுகோள் விடுத்து வருகிறார். மேலும் அரசியல் பிரபலங்கள், சினிமா பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் என பலரும் தடுப்பூசி போட்டுக்கொள்கின்றனர். இந்நிலையில் தடுப்பூசி பற்றாக்குறையின் காரணமாக தடுப்பூசி போடும் பணி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து தமிழ்நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி மீண்டும் தொடங்கியது. நீண்ட வரிசையில் மக்கள் காத்திருந்து ஆர்வத்துடன் தடுப்பூசி செலுத்திக் கொள்கின்றனர்.