இந்தியாவில் பல மாநிலங்களில் தொடர்ந்து தொற்று படிப்படியாக குறைந்து கொண்டு வருகின்றது. இது மக்களிடையே மிகுந்த மகிழ்ச்சியை அளித்துள்ளது. இருப்பினும் மக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும் என்று மத்திய மாநில அரசுகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. அதுமட்டுமில்லாமல் தடுப்பூசி போடுவது தொடர்பான விதிமுறைகளிலும் சிறிய மாற்றத்தை கொண்டு வந்துள்ளது.
அதன்படி, கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள ஆதார், வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு, உள்ளிட்ட ஒன்பது அடையாள சான்றுகளில் ஒன்றாவது கட்டாயம் என்ற விதியில் திருத்தம் செய்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதன்படி மேற்கொண்ட சான்றிதழ்கள் எதுவும் இல்லாதவர்கள், ஸ்மார்ட்போன் வசதி இல்லாதவர்கள் நேரடியாக சென்று பதிவு செய்து தடுப்பூசி எடுத்துக் கொள்ளும் வகையில், பிரத்தியேக தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளது.