Categories
உலக செய்திகள் கொரோனா தடுப்பு மருந்து

தடுப்பூசி போடுவது நல்லது…. பாதுகாப்பா இருக்கலாம்…. அறிவுறுத்திய இங்கிலாந்து அரசி…!!

இங்கிலாந்து நாட்டின் அரசி எலிசபெத் தடுப்பூசி போட்டுக் கொண்டதால் எந்த பாதிப்பும் இல்லை என கூறியுள்ளார்.

இங்கிலாந்து நாட்டின் இரண்டாம் அரசி எலிசபெத் மற்றும் அவரின் கணவர் பிலிப் கடந்த ஜனவரி மாதம் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டனர் .இவரின் மூத்த மகனும்,வாரிசுமான இளவரசர் சார்லஸ் மற்றும் அவரின் மனைவி கமிலா ஆகியோரும் தடுப்பூசி போட்டுக் கொண்டனர். இங்கிலாந்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரம் ஆக்கப்பட்டுள்ளது.
தடுப்பூசி போடுவது பற்றி இங்கிலாந்து அரசி கூறுவது என்னவென்றால்”நான் தடுப்பு ஊசி போட்டுக்கொண்டேன் இதனால் எந்த பாதிப்பும் எனக்கு ஏற்படவில்லை.

 

தடுப்பூசி போட தயக்கம் கொள்ள தேவை இல்லை. தடுப்பூசி போடுவது எளிது பாதுகாப்பும் கூட. தடுப்பூசி போடவில்லை என்றால் எந்தப் பாதுகாப்பும் இருக்காது. தடுப்பூசி போட்டுக்கொண்டால் பாதுகாப்புடன் இருப்பதாக உணர முடியும். தடுப்பூசி போடும் திட்டத்தை நான் வரவேற்கிறேன்”. இங்கிலாந்து நாட்டின் தலைவர் பிலிப் தடுப்பூசி போடுவது  ஒரு சிறப்பான பணி என்று சுகாதாரத்துறை தலைவரிடம் கூறியுள்ளார்.

 

இது ஒரு ஊக்க செயல் என்றும் கூறினார். இரண்டாம் உலகப்போரின்போது ஏராளமானோர் உயிரிழந்தனர் அதுபோல இப்போது கொரோனாவின் தாக்குதலும் உள்ளது.அதனால் தடுப்பூசி போட்டுக் கொள்வது மிகவும் அவசியம் என்று கூறினார். இதற்கு நாம் அனைவரும் கண்டிப்பாக ஆதரவு தெரிவிக்க வேண்டும். 94 வயதான இளவரசர் பிலிப் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் ஆனால் அவருக்கு கொரொனா தொற்று இல்லை என்று கூறப்பட்டது

By inza dev

IF YOU WANT TO KNOW MEANS THEN TRY TO FIND ME AND ASK ME

Categories

Tech |