Categories
உலக செய்திகள்

தடுப்பூசி போட்டவர் மரணம்…. மருந்தில் பிரச்சினையில்லை…. வாதாடும் நிறுவனம்…!!

அஸ்ட்ரா ஜெனேகா தடுப்பூசி போட்டு கொண்ட ஆசிரியர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இத்தாலியை சேர்ந்த ஆசிரியர் சான்ட்ரோ டோஃனட்டி  (57 வயது). இவர் சம்பவத்தன்று அஸ்ட்ரா ஜெனேகா நிறுவனம் தயாரித்த கொரோனா தடுப்பூசிகளை போட்டுக் கொண்டுள்ளார். இதனையடுத்து மறுநாள் திடீரென அந்த ஆசிரியர் உயிரிழந்துள்ளார். இவரது இறப்புக்கான காரணங்கள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. இந்நிலையில் அரசு தரப்பு வழக்கறிஞர்கள் அந்நிறுவனத்தின் மீது கொலை வழக்கு தொடர்ந்துள்ளனர்.

இதனிடையே ஏற்கனவே பல நாடுகளில் அஸ்ட்ரா ஜெனேகா தடுப்பூசிகள் பக்கவிளைவுகளை ஏற்படுத்துவதால் அதனை பயன்படுத்த  தற்காலிக தடை விதித்துள்ளது. இருப்பினும் அந்த நிறுவனம் தங்களது தடுப்பூசிகளில் எந்த பிரச்சனையும் இல்லை என்று தொடர்ந்து கூறி வருகின்றது. இந்நிலையில் அந்நிறுவனத்தின் தடுப்பூசியை போட்டுக்கொண்ட நபர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |