பிரபல நோயியல் நிபுணர் ஒருவர் தடுப்பூசி போட்டுக்கொண்டாலும் கொரோனா வைரஸ் தாக்கும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக பெங்களூருவில் உள்ள அரசு மருத்துவமனையில் நோய் தொற்று கர்நாடக அரசின் பொருளாதார ஆலோசனைக் குழு உறுப்பினருமான ரவி செய்தியாளர்களை சந்தித்தார். அதில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. தடுப்பூசி போட்டுக் கொண்டாலும் கொரோனா வைரஸ் தாக்கும் என்றும், ஆனால் பாதிப்பு ஏற்படாது என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.
காய்ச்சல், தலை வலி, மூச்சுத் திணறல் உள்ளிட்ட பாதிப்புகள் வராது. ஆனால் அவர்களிடமிருந்து பலருக்கு வைரஸ் பரவும். தடுப்பூசி போட்டுக் கொண்டுவர்கள் வாழ்க்கையின் இறுதிவரை முக கவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது மிகவும் முக்கியம் என்று அவர் தெரிவித்தார்.