உலகம் முழுவதுமாக பல நாடுகளிலும் கொரோனாவை முற்றிலுமாக ஒழிக்க தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. ஆனால் மக்களிடையே தடுப்பூசி போடுவதற்கு பயமும் ஒருவித குழப்பமும் நீடித்துக் கொண்டே வருகிறது. இதன் காரணமாக ஒரு சிலர் மட்டுமே தடுப்பூசி போட்டுக் கொள்கின்றனர். இதனால் மக்களிடையே தடுப்பூசி போட்டுக் கொள்வதை ஆர்வப்படுத்தும் விதமாக ஒவ்வொரு நாட்டிலும் வித்தியாசமான முறையில் பரிசளித்து வருகின்றனர்.
அந்தவகையில் அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள தயக்கம் காட்டுபவர்களை கவரும் வகையில் பல அதிரடி அறிவிப்புகளை அதிபர் பைடன் அறிவித்துள்ளார். அதாவது தடுப்பூசி போட்டுக்கொண்டால் இலவச பீர், ஊதியத்துடன் கூடிய விடுமுறை, இலவச சொகுசு கப்பல் பயணம் உள்ளிட்ட சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
ஜூலை 4-ஆம் தேதி 70 சதவீதம் பேருக்கு தடுப்பு ஊசி செலுத்தும் நோக்கத்தோடு இச்சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.