நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் முக்கிய பகுதியாக தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றது. ஒரு சில மாநிலங்களில் தடுப்பூசி செலுத்தி கொள்பவர்களுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதனால் மக்களும் ஆர்வத்துடன் தடுப்பூசி செலுத்தி கொள்கின்றனர்.
இந்நிலையில் தெலுங்கானா மாநிலத்தில் தடுப்பூசி போட்டுக் கொண்ட வாடிக்கையாளர்களுக்கு 50% தள்ளுபடி வழங்கப்படும் என்று ஒரு அலங்காரப் பொருட்கள் கடையின் உரிமையாளர் அறிவித்துள்ளார். தெலுங்கானாவில் பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்தி கொள்ளுமாறு அரசாங்கம் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், அரசாங்கத்திற்கு உதவும் எண்ணத்தில் இவ்வாறு செய்வதாக கடையின் உரிமையாளர் கூறியுள்ளார். அதனால் மக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள ஆர்வத்துடன் செல்கின்றனர்.