தமிழகம் முழுவதிலும் கொரோணா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. கடந்த செப்டம்பர் 12ஆம் தேதி தமிழகம் முழுவதிலும் மாபெரும் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது. அதில் அரசு நிர்ணயித்த 20 லட்சம் இலக்கை கடந்து 28.5 லட்சம் பேர் தடுப்பூசி செலுத்தி கொண்டனர். இந்தியாவில் இது மாபெரும் சாதனையை படைத்தது.
இந்நிலையில் தமிழகம் முழுவதும் மீண்டும் இன்று மெகா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. இதையடுத்து திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று நடக்கும் மெகா தடுப்பூசி முகாமில் தடுப்பூசி செலுத்துவோருக்கு ஆண்ட்ராய்டு போன் இலவசம் என நகராட்சி ஆணையர் அறிவித்துள்ளார். அதாவது தடுப்பூசியை நிறுத்திக்கொள்ளும் 3 பேருக்கு தலா 10 ஆயிரம் மதிப்புள்ள ஆண்ட்ராய்டு போன் இலவசமாக வழங்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.