கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டால் சொத்து வரியில் சலுகை வழங்கப்படும் என்று டெல்லி மாநகராட்சி அறிவித்துள்ளது.
சீனாவில் தோன்றிய வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதிலும் பரவத் தொடங்கியது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வந்த நிலையில், தற்போது தடுப்பூசி மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது.
ஆனால் சில நாடுகளில் கொரோனாவின் தாக்கம் இன்னும் குறையாமல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதுமட்டுமன்றி பெரும்பாலான நாடுகளில் கொரோனா இரண்டாவது பரவ தொடங்கியுள்ளது. அதனால் மீண்டும் ஊரடங்கு அமல் படுத்தப்படும் சூழல் உருவாகியுள்ளது. மேலும் உலக நாடுகள் அனைத்தும் தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்தியுள்ளன.
இந்நிலையில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டால் சொத்து வரியில் சலுகை வழங்கப்படும் என்று டெல்லி மாநகராட்சி அறிவித்துள்ளது. தடுப்பூசி போட்டுக்கொள்ள மக்கள் யாரும் முன்வராததால் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தடுப்பூசி போட்டு கொண்டதற்கான சான்றுடன் சொத்து வரி சலுகைக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் சொத்து வரியில் 5 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.