Categories
உலக செய்திகள் கொரோனா தடுப்பு மருந்து

தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகு… அறிய நோயால் உயிரிழந்த பெண்… பல நாடுகளில் தடை செய்யப்பட்டு வரும் தடுப்பூசி…!!!

அஸ்திரேலியாவில் அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசி போட்ட பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸில் உள்ள லேக் மெக்குவாரி பகுதியில் உள்ள 48 வயதான பெண் ஒருவருக்கு கொரோனா தடுப்பூசியான அஸ்ட்ராஜெனேகா மருந்து கடந்த 7ம் தேதி செலுத்தப்பட்டுள்ளது. அதற்கு அடுத்த நாளே அந்த பெண்ணுக்கு அரிய வகையான ரத்தம் உறைதல் பிரச்சனை ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன்பின் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் சிகிச்சை பலனின்றி கடந்த புதன்கிழமை அன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து அப்பெண்ணுக்கு நீரிழிவு நோய் மட்டுமே இருந்ததாகவும், வேறு எந்த பிரச்சனையும் இல்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே இந்த அஸ்ட்ராஜெனேகா மருந்தை பல உலக நாடுகள் தடை செய்து வருகின்றன. அந்தவகையில் டென்மார்க் இந்த தடுப்பூசியை முற்றிலுமாக தடை செய்துள்ளது. மேலும் பிரித்தானியா, ஜெர்மனி, பிரான்ஸ் போன்ற நாடுகள் 60 வயது மேற்பட்டவர்களுக்கு மட்டுமே இந்த தடுப்பூசியை பயன்படுத்த தீர்மானித்துள்ளது

Categories

Tech |