இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை வேகம் எடுத்து வருகிறது. இதனால் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றன. இந்நிலையில் தமிழகத்திலும் நாளுக்கு நாள் கொரோனாவின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகள் நிரம்பி வழிவதால் படுக்கை வசதிகள் இல்லாத நிலை ஏற்பட்டு வருகிறது.
எனவே பள்ளிகள், கல்லூரிகள், தனியார் மருத்துவமனைகள், தொழில் நிறுவனங்களில் படுக்கை வசதிகள் ஏற்படுத்த தமிழக சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. கொரோனா இரண்டாவது அலை தாக்கத்தை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது. இது குறித்த உண்மை நிலவரம் உறைய வைக்கிறது. இந்நிலையில் தலைநகர் டெல்லியிலேயே ஆக்சிஜன் பற்றாக்குறையால் கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். இதனால் கொரோனாவால் இந்தியா கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மே 1ம் தேதி முதல் தடுப்பூசி போடப்படும் என அரசு அறிவித்திருந்த நிலையில் நேற்று முதல் முன்பதிவு தொடங்கியது.
இந்நிலையில் பாலிவுட் நடிகை சன்னிலியோன், “கொரோனா தடுப்பூசி போடுவதற்கான நேரமிது. அனைவரும் குறிப்பாக முன் களப்பணியாளர்கள் தொற்று நோய்க்கு எதிராக போராடும் அவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்வது அவசியம். உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள https://www.cowin.gov.in/home இந்த வெப்சைட்டில் உடனே பதிவு செய்யுங்கள்” என்று கூறியுள்ளார்.