தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் தடுப்பூசி போடுவது ஒன்றே கொரோனவை ஒழிக்க நிரந்தர தீர்வு ஆகும். இதனால் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கோயம்பேடு சந்தையில் ஆய்வு மேற்கொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்த சென்னை மாநகராட்சி ஆணையர், “இதுவரை கோயம்பேடு மார்க்கெட்டில் உள்ள வியாபாரிகள் 6,340 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மேலும் இன்னும் 10 நாட்களில் தடுப்பூசி செலுத்தி கொள்ளாத வியாபாரிகளுக்கு கோயம்பேடு காய்கறிச் சந்தையில் அனுமதி கிடையாது என்று தெரிவித்துள்ளார். வெளிமாநிலங்களில், வெளி மாவட்டங்களில் இருந்து வரும் வியாபாரிகளுக்கு தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும் தெரிவித்துள்ளார்.