கொரோனா தடுப்பூசிகள் அதிக அளவில் கையிருப்பு உள்ளதால் பொதுமக்கள் தயக்கமின்றி தடுப்பூசிகளை செய்து கொள்ளலாம் என அமைச்சர் திரு.சுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் சென்னை உட்பட பல்வேறு இடங்களில் பதினோராவது மெகா தடுப்பூசி திட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. சென்னையில் உள்ள மின் தங்க சாலையில் தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்து மக்கள் நலவாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் நிருபர்களிடம் பேட்டியளித்தார். அந்த பேட்டியில் அவர் கூறியதாவது, தமிழகத்தில் இதுவரை 6 கோடியே 74 லட்சத்து 66 ஆயிரத்து 155 பேர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். இதுபோக ஒரு கோடியே ஒரு லட்சம் டோஸ் கையிருப்பு உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
சுமார் 72 லட்சம் பேர் இரண்டாவது டோஸ் செலுத்த இருப்பதாகவும் கூறியுள்ளார். எனவே போதுமான அளவு தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளதால் பொதுமக்கள் தடுப்பூசி போட தயக்கம் காட்ட வேண்டாம் என மக்கள் நலத் துறை அமைச்சர் திரு மா. சுப்பிரமணியன் அவர்கள் கூறியுள்ளார். மேலும் தடுப்பூசி செலுத்தி கொண்ட பிறகு கொரோனா தொற்று ஏற்பட்டால் எந்த பாதிப்பும் ஏற்படாது என்பதற்கு மக்கள் நீதி மைய தலைவர் கமலஹாசன் சிறந்த உதாரணம் எனவும் அவர் கூறியுள்ளார்.