தடுப்பூசி போட்டுக் கொண்டதால் எந்த பாதிப்பும் இல்லை என்று பிரிட்டன் மகாராணி எலிசபெத் கூறியுள்ளார் .
பிரிட்டன் இரண்டாம் மகாராணி எலிசபெத் மற்றும் அவருடைய 94 வயதான கணவர் பிலிப் ஆகிய இருவரும் கடந்த ஜனவரி மாதம் தடுப்பூசி போட்டுக் கொண்டனர். மேலும் அவரின் மூத்த மகனான சார்லஸ் மற்றும் அவரது மனைவி கமிலா ஆகியோரும் தடுப்பூசி போட்டுக் கொண்டனர். இதுகுறித்து மகாராணி கூறுகையில் தடுப்பூசி போட்டுக் கொண்டதால் எந்த பாதிப்பும் இல்லை என்றும் இதுகுறித்து தயக்கம் கொள்பவர்கள் தடுப்பூசி போட சிந்திக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். தடுப்பூசி போட்டுக் கொள்பவர்கள் பாதுகாப்பு பெறுவார்கள்.
எனவே மக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் .இந்த திட்டத்தை நான் வரவேற்கிறேன் என்றும் கூறியுள்ளார். தற்போது பிரிட்டனில் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது .மேலும் மருத்துமனையில் சிகிச்சை பெற்று வரும் மன்னர் பிலிப் தடுப்பூசி அவசியம் என்று கூறியுள்ளார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் மன்னருக்கு கொரோனா தொற்று இல்லை என்பது குறிப்பிடத்தக்கது .