தடுப்பூசி போட்டுக் கொண்ட குஜராத் அமைச்சருக்கு மீண்டும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகின்றது. முதற்கட்டமாக சுகாதாரத்துறை ஊழியர்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டது. இதையடுத்து நாற்பது முதல் அறுபது வயது உள்ளவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. இந்நிலையில் குஜராத் அமைச்சர் ஈஸ்வரன் படேலுக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு கொரோனா தடுப்பு ஊசி போடப்பட்டது.
தற்போது அவருக்கு மீண்டும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது ‘எனக்கு கொரோனா உறுதியாகி உள்ளது ஆகையால் தொடர்பில் இருந்தவர்கள் கட்டாயம் பரிசோதனைக்கு உட்படுத்திக் கொள்ள வேண்டும்’ என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.