ஜெர்மனியில் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் ஊரடங்கு விதிகளை பின்பற்ற வேண்டாம் என புதிய திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் வுகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தொற்று உலக நாடு முழுவதிலும் பரவி ஏராளமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. ஜெர்மனியிலும் தொடர்ந்து ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது தடுப்பூசி போடும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜெர்மன் நாடாளுமன்றம் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் இனி ஊரடங்கு கட்டுப்பாடுகள், தனிமைப்படுத்துதல் முதலிய விதிகளை பின்பற்ற வேண்டாம் என்றும் வெளியில் செல்லும்போது தங்களுக்கு கொரோனா இல்லை எந்த ஆதாரத்தை காட்ட வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளது.
நாடாளுமன்றம் அறிவித்துள்ள இந்த புதிய திட்டம் மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. இந்நிலையில் ராபர்ட் கோக் நிறுவனம் ஜெர்மனியில் 8.6 சதவீதம் மக்கள் முழுமையாக தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர் என்றும் 30 சதவீதத்திற்கும் அதிகமான மக்கள் முதல் டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டு இரண்டாவது தடுப்பூசிக்காக காத்துக் கொண்டிருக்கின்றனர் எனவும் தெரிவித்துள்ளது.