Categories
தேசிய செய்திகள்

தடுப்பூசி போட்ட பிரதமர் மோடி… செவிலியரிடம் கேட்ட கேள்வி… நெகிழ்ச்சி சம்பவம்…!!!

இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன் தடுப்பூசி போட்டுக் கொண்ட போது செவிலியரிடம் கேட்ட கேள்வி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

கொரோனா  தொற்று பாதிப்பில் இருந்து காத்துக் கொள்வதற்காக இந்தியா முழுவதும் அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. அதன்படி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் நேற்று பிரதமர் நரேந்திர மோடி கொரோனா  தடுப்பூசி போட்டுக்கொண்டார். இவருக்கு கொரோனா தடுப்பூசியை புதுச்சேரியைச் சேர்ந்த செவிலியர் நிவேதா மற்றும் கேரளாவை சேர்ந்த செவிலியர் ரோஸம்மா ஆகிய இருவரும் செலுத்தினார்கள். அதன் பிறகு பிரதமர் கேட்ட கேள்விக்கு செவிலியர் பதிலளித்தார்.

அதுபற்றி செவிலியர் கூறியது,” என்னிடம் எங்கிருந்து வருகிறீர்கள் என்று கேட்டார். நான் புதுச்சேரியில் இருந்து வருவதாக கூறினேன். புது டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் 3 ஆண்டுகளாக வேலை பார்த்து வருவதாகவும் தற்போது பொருள் தடுப்புப் பிரிவில் பணி சிறப்பு பணியாற்றி வருவதாகவும் கூறினேன். மேலும் இன்று காலை தான் பிரதமர் மோடி தடுப்பூசி போட்டுக்கொள்ள வருகிறார் என கூறினார்கள். அங்கு வந்த பிரதமர் என்னுடன் நன்றாக பேசியதாக கூறினார். தற்போது அவருக்கு பாரத் பயோடெக்கின் என்ற  தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மீண்டும் 28 நாட்கள் கழித்து இரண்டாவது டோஸ் போடப்பட உள்ளது.  பின்பு பிரதமர் தடுப்பூசி போட்ட வழியே தெரியவில்லை என்று என்னிடம் கூறினார்” என்று அவர்  கூறியுள்ளார்.

Categories

Tech |