Categories
உலக செய்திகள்

தடுப்பூசி போட்ட வேலைக்கு வாங்க…. இல்லன்னா உங்களுக்கு வேலை இல்ல…. அரசு போட்ட அதிரடி உத்தரவு….!!!!

உலக நாடுகளை கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா அச்சுறுத்தி வருகிறது. அதனை ஒழிக்க தடுப்பூசி மட்டுமே ஒரே ஆயுதம் என்பதால் உலக நாடுகள் அனைத்தும் தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்தியுள்ளனர். அதிலும் சில நாடுகள் மக்களை தடுப்பூசி செலுத்திக் கொள்ள ஊக்குவிக்கும் விதமாக பல சலுகைகள் மற்றும் பரிசுகளை வழங்கி வருகின்றன. சில நாடுகள் கட்டுப்பாடுகளை விதித்து தடுப்பூசி கட்டாயம் என அறிவித்துள்ளது.

இந்நிலையில் தென் பசுபிக் பெருங்கடலில் அமைந்துள்ள தீவு நாடான பிஜியில் “தடுப்பூசி போடா விட்டால், வேலை இல்லை” என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. தடுப்பு ஊசி செலுத்தி கொள்ளாதவர்கள் வேலையை இழக்க நேரிடும் என்று பிரதமர் தெரிவித்துள்ளார். எனவே ஆகஸ்ட் 15ஆம் தேதிக்குள் தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்தி கொள்ளாத அரசு ஊழியர்கள் கட்டாய விடுப்பில் அனுப்பப்படுவார்கள் என்றும் நவம்பர் 1-ஆம் தேதிக்குள் இரண்டாவது டோஸ் செலுத்த படாவிட்டால் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |