Categories
தேசிய செய்திகள்

தடுப்பூசி போட யாரையும் கட்டாயப்படுத்தக்கூடாது…. அதிரடி உத்தரவு…..!!!!

இந்தியா முழுவதிலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால், அதனை கட்டுப்படுத்த நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கான தடுப்பூசிகளை மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வழங்கி வருகிறது. அதில் முதற்கட்டமாக சுகாதாரத்துறை ஊழியர்கள் மற்றும் முன் களப் பணியாளர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. அதன் பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டது. தற்போது பெரும்பாலான மாநிலங்களில் 18 வயது முதல் 44 வயதுடையோருக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கியுள்ளது.

இந்நிலையில் கொரோனா தடுப்பூசியைப் போட்டுக் கொள்ளும்படி கட்டாயப்படுத்துவது அடிப்படை உரிமையை மீறுவதாகும் என மேகாலயா நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கொரோனாவில் இருந்து தற்காத்துக்கொள்ள தடுப்பூசி அவசியம் தான்.ஆனால் அதை செலுத்த கட்டாயப்படுத்துவது அதனுடன் தொடர்புடைய அடிப்படை நலத்தை பாழாக்கிவிடும் என கூறியுள்ளது.

Categories

Tech |