இந்தியாவில் கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதற்காக கோவாக்சின், கோவிஷீயீல்டு தடுப்பூசிகள் மக்களுக்கு போடப்பட்டு வருகிறது. இருப்பினும் தடுப்புசி பற்றாக்குறையின் காரணமாக பஞ்சாப், ஜார்கண்ட் உள்ளிட்ட பல மாநிலங்களிலும் பொதுமக்களுக்கு தடுப்பூசி போட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அந்தவகையில் தமிழகத்திலும் பல்வேறு மாவட்டங்களிலும் தடுப்பூசி பற்றாக்குறை காரணமாக தடுப்பூசி முகாம் ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில் சென்னையில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக கடந்த இரண்டு நாட்களாக தடுப்பூசி முகாம் ரத்து செய்யப்பட்டு வந்த நிலையில் இன்று முதல் மீண்டும் தடுப்பூசி போடப்பட்டு வருகின்றது. எனவே சென்னையில் தடுப்பூசி செலுத்திக் கொள்ள விரும்பும் பொதுமக்கள் மாநகராட்சி இணையதள http://gccvaccine.in பக்கத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.