Categories
மாநில செய்திகள்

தடுப்பூசி மட்டுமே நிரந்தர தீர்வு….  சுகாதாரத்துறை சொல்லும் தகவல்…கேளுங்க மக்களே…!!!

தடுப்பூசியால் மட்டுமே கொரோனாவை தடுக்க முடியும் என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த போது தெரிவித்ததாவது: “மக்கள் இந்த சமயங்களில் பதட்டப்பட தேவையில்லை. நாங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை அனைத்தையும் செய்து வருகிறோம். அனைவரும் முதலில் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். தடுப்பூசியால் மட்டுமே கொரோனாவை தடுக்க முடியும்.  முககவசம் அணிவது தொடர்ந்து குறைந்து வருகின்றது.

பொது வெளியில் செல்லும் மக்கள் கட்டாயம் முக கவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது அவசியம். தமிழக அரசு தொடர்ந்து பல இடங்களில் தடுப்பூசி முகாம்கள் நடத்தி மக்கள் அனைவரையும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வலியுறுத்தி வருகிறது. தற்போது  தமிழகத்தில் இதுவரை 1.70 லட்சம் பேர் முதல் தவணை தடுப்பூசி போடாமல் இருந்து வருகின்றனர். இரண்டாம் தவணை தடுப்பூசி போடாமல் இருப்பவர்கள் 24.7 6 லட்சம் பேர் உள்ளனர்.  எனவே மக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள முன்வர வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

Categories

Tech |