Categories
மாநில செய்திகள்

தடுப்பூசி மருந்துகளை அரசு பயன்படுத்த வேண்டும்…. ஓபிஎஸ் வேண்டுகோள்….!!!!

தமிழகம் முழுவதிலும் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதில் முதற்கட்டமாக முன் களப் பணியாளர்கள் மற்றும் சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதன் பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்ட வந்த நிலையில் தற்போது  18 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தனியார் மருத்துவமனைகளில் பயன்படுத்தாமல் உள்ள தடுப்பூசி மருந்துகளை தமிழ்நாடு அரசு பயன்படுத்திக் கொள்ள மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம் தமிழ்நாட்டின் தேவை விரைவில் பூர்த்தி செய்யப்படும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Categories

Tech |