சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே, தடுப்பூசி தடுப்பு முகாமில் இருந்த பேனரில், பிரதமர் புகைப்படம் இல்லை எனக்கூறி பாஜகவினர் அந்த பேனரை அகற்றியுள்ளனர்.
கொரோனா தொற்றை தடுப்பதற்காக ஒவ்வொரு வாரமும் தடுப்பூசி முகாம் தமிழ்நாடு முழுவதும் நடத்தப்படுகிறது. அதன்படி, இந்த வாரமும் தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டம், இளையான்குடி வட்டம் கிராமத்தில் நடைபெற்ற தடுப்பூசி முகாமில் கட்டப்பட்டிருந்த பேனரில் பிரதமர் புகைப்படம் இல்லை என கூறி அந்த பேனரை பாஜகவினர் அகற்றியுள்ளனர். அடுத்து பேனர் வைத்தால் பிரதமர் மோடியின் புகைப்படம் கண்டிப்பாக இடம்பெறவேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.