கொரோனா தடுப்பூசிகள் அமெரிக்கர்களுக்கு கொடுத்தது போக மீதமுள்ளதை மட்டுமே மற்ற நாடுகளுக்கு வழங்க இருப்பதாக ஜோ பைடன் கூறியுள்ளார்.
உலக நாடுகளில் அச்சுறுத்தி வந்த கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நாடுகளில் தடுப்பூசிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்ட செலுத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் அமெரிக்காவில் செய்தியாளர்களிடம் பேசிய ஜோ பைடன் “100 மில்லியன் தடுப்பூசிகளை ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்திடமிருந்து வாங்குவதற்க்காக அமெரிக்கா ஒப்பந்தம் செய்துள்ளது.
இந்த தடுப்பூசிகளை முதலில் அமெரிக்கர்களுக்கு செலுத்திவிட்டு மீதமிருந்தால் அதை உலகின் பிற நாடுகளுடன் பகிர்ந்து கொள்ளலாம்” என்று கூறியுள்ளார். மேலும் வளரும் நாடுகளில் தடுப்பூசிகளை விநியோகிப்பதற்காக உலக சுகாதார அமைப்பின் கோவக்ஸ் திட்டத்துக்கு 4 பில்லியன் டாலர்களை அமெரிக்கா வழங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.