ஜெர்மனியின் ஒரு நகரில் இருக்கும் மசூதி தடுப்பூசி மையமாக மாற்றப்படுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஜெர்மனியில் Cologne என்ற நகரில் இருக்கும் மத்திய மசூதி, தடுப்பூசி செலுத்தும் மையமாக மாற்றப்பட்டுள்ளது. அந்த வகையில் இம்மசூதியில் சுமார் 2000 நபர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கான ஏற்பாடுகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் மசூதியின் தலைமை பொறுப்பில் உள்ள Kazim Turkmen என்பவர், இது குறித்து தெரிவித்துள்ளதாவது, எங்கள் மசூதியை தடுப்பூசி செலுத்தும் மையமாக தேர்ந்தெடுத்ததற்கு Cologne நகரத்திற்கும் அதன் மருத்துவ அமைப்பிற்கும் நன்றி கூறுகிறேன், இது நம் கடமையாக எண்ணுகிறேன் என்று கூறியுள்ளார்.