கொரோனா தடுப்பூசியை நடைமுறைக்கு கொண்டுவர,3 சிறப்பு குழுக்களை அமைக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
சீனாவின் ஹூகான் மாகாணத்தில் பரவத் தொடங்கிய கொரோனவைரஸ் இன்று உலக அளவில் மிகப் பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. பலநாடுகள் இதனுடைய பாதிப்பை சீராக கட்டுப்படுத்தி வந்தாலும், இதற்கு தடுப்பூசி கண்டுபிடிப்பது தான் சிறந்த வழி என்பதால், அதற்கான பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில்,
இந்தியாவில் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்ததும், அனைத்து மக்களுக்கும் வழங்கப்படுவதை உறுதி செய்ய மூன்று சிறப்பு குழுக்களை அமைக்க அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. தடுப்பூசி பரிசோதனை இறுதிக்கட்டத்தில் உள்ளதாகவும், தடுப்பூசி அறிமுகப்படுத்தப்பட்டது முதல் ஓராண்டுக்கு பல்வேறு துறையினர் பணிகளில் ஈடுபடுத்தப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.