எந்த தடுப்பூசியும் 100% செயல்திறன் கொண்டது கிடையாது என்று டெல்லி எய்ம்ஸ் இயக்குனர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்துக் கொண்டே வருகிறது. இவற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக மத்திய அரசு பல்வேறு கட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மக்கள் அனைவரையும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வலியுறுத்தி வருகின்றது. இந்த நிலையில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குனர் ரன்தீப் குலேரியா எந்த ஒரு தடுப்பூசியும் 100%திறன் வாய்ந்தது அல்ல.
தடுப்பூசி போட்டாலும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்படலாம். உடலில் உள்ள ஆன்டிபாடிகள் அந்த வைரஸை பல்கிப் பெருக அனுமதிக்காது . இதனால் கடுமையான நோய் பாதிப்பு இருக்காது என்று அவர் தெரிவித்தார். கொரோனா விதிமுறைகளை அலட்சியப்படுத்தியது தான் இரண்டாம் அலை தீவிரமாக பரவுவதற்கு முக்கிய காரணம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.