அடுத்த மாதம் முதல் அமெரிக்காவில் கொரோனாவுக்கு தடுப்பூசி போடப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில் அமெரிக்காவில் இதன் பாதிப்பு படு மோசமான நிலையை அடைந்துள்ளது. பல கோடி மக்கள் இதனால் பாதிப்படைந்துள்ளனர். மேலும் இதற்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் பல விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகின்றனர். சில தடுப்பு மருந்து நிறுவனங்கள் தங்களின் தடுப்பூசி 95 சதவீதம் வெற்றியை அடைந்து விட்டதாக தெரிவித்து வருகின்றனர்.
இதையடுத்து நோய் தீவிரமடையாமல் தடுப்பதில் 100% வெற்றி அளிக்கும் தடுப்பூசியை தயாரித்து உள்ளதாக அமெரிக்க மருத்துவ நிறுவனமான மாடர்னா தெரிவித்துள்ளது. மேலும் அடுத்த மாதமே அமெரிக்கர்களுக்கு தடுப்பூசி போடப்படும் என அமெரிக்க தேசிய ஒவ்வாமை & தொற்று நோய் ஆய்வுக் கழக இயக்குனர் அந்தோணி பவுசி தெரிவித்துள்ளார். விரைவில் இந்த தடுப்பூசி உலகம் முழுவதும் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்றும் தெரிவித்துள்ளது.