Categories
உலக செய்திகள்

“தடைகளை விளக்கினால் மட்டுமே இது சாத்தியம்”…. உக்ரேனிலிருந்து உணவுப் பொருள்கள் ஏற்றுமதிக்கு…. ரஷ்ய வைத்த அதிரடி செக்….!!

ரஷிய மீதான தடைகளை விலக்கினால் மட்டுமே உக்ரைனிலிருந்து உணவு பொருள்களை ஏற்றி செல்லும் கப்பல்களுக்கு மனிதாபிமான வழித்தடங்களை உருவாக்க தயாராக இருப்பதாக ரஷ்ய துணை வெளியுறவு அமைச்சர் கூறியுள்ளார். 

நேட்டோ என்னும் பாதுகாப்பு அமைப்பில்  சேர விரும்பிய உக்ரைனுக்கு எதிராக ரஷிய கடந்த பிப்ரவரி மாதம் 24-ந் தேதியிலிருந்து போரை தொடங்கியுள்ளது. குறிப்பாக கிழக்கு உக்ரைன் மீதான தாக்குதலை ரஷிய தொடர்ந்து தீவிரப்படுத்தி வருகின்றது. இந்நிலையில் டொனெட்ஸ்க் பகுதியில் சுவிட்லோடர்ஸ்க் என்ற நகரத்தை ரஷிய படைகள் நேற்று கைப்பற்றியுள்ளது.

இதனை தொடர்ந்து உக்ரைனில் மனிதாபிமான உணவு வழித்தடங்களை வழங்குவதற்கு ரஷிய தயாராக உள்ளது என அந்நாட்டு துணை வெளியுறவு மந்திரி ஆண்ட்ரே ருடென்கோ தெரிவித்துள்ளார். கருங்கடலில் உள்ள உக்ரைன் துறைமுகங்கள் போருக்குப் பின் ரஷியவால் முடக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து உக்ரைனில் 20 மில்லியன் டன்களுக்கும் அதிகமான தானியங்கள் கிடங்குகளில் சிக்கியுள்ளது. உக்ரைனிலிருந்து உணவுப் பொருட்களை ஏற்றிச் செல்ல கூடிய கப்பல்களுக்கு மனிதாபிமான உணவு வழித்தடங்களை உருவாக்க ரஷ்யா தயாராக இருப்பதாக ரஷ்ய துணை வெளியுறவு அமைச்சர்  தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது, “உணவுப் பிரச்சினைக்கு ஒரு விரிவான அணுகுமுறை தேவைப்படுகிறது. ரஷ்ய ஏற்றுமதிகள் மற்றும் நிதி பரிவர்த்தனைகள் மீது விதிக்கப்பட்ட தடைகளை நீக்குவதற்கு ஈடாக, உக்ரைனிலிருந்து உணவுப் பொருட்களை ஏற்றிச் செல்லும் கப்பல்களுக்கு மனிதாபிமான உணவு வழித்தடங்களை உருவாக்க ரஷ்ய தயாராக உள்ளது. இவ்விவகாரம் தொடர்பாக ஐக்கிய நாடு சபையுடன் ரஷ்ய தொடர்பில் உள்ளது” என்று அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |