Categories
தேசிய செய்திகள்

“தடைக்கல்லாக இருக்காதீர்கள்”… பாலமாக இருங்கள்… ட்விட்டரில் பதிவிட்ட ராகுல் காந்தி…!!

டெல்லியில் விவசாயிகளின் போராட்டத்தை கட்டுப்படுவதற்காக எல்லைகளில் தடுப்பு அமைக்கப்பட்டதற்கு ராகுல் காந்தி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்

தலைநகர் டெல்லியில் அரசின் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து கடந்த வருடம் நவம்பர் 26-ஆம் தேதியிலிருந்து விவசாயிகளின் போராட்டம் நடந்து வருகிறது. அதன் பின்பு குடியரசு தினத்தில் விவசாயிகளால் நடத்தப்பட்ட டிராக்டர் பேரணியில் பல கலவரங்கள் நடந்தது. இதனையடுத்து காவல்துறையினர் பல்வேறு வழிமுறைகளில் விவசாயிகளின் போராட்டத்தை கட்டுப்படுத்துவதற்கு முயன்று வருகின்றனர்.

இதன் படி டெல்லியில் பாதுகாப்பை பலப்படுத்துவதற்காக எல்லையில்  தடுப்புகள் அமைத்துள்ளனர். மேலும் டெல்லி-உத்திர பிரதேசம் இடையிலான எல்லைகளில் விவசாயிகள் உள் நுழையாதவாறு தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் டெல்லி-ஹரியானா மாநிலத்தின் எல்லையிலும் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. அதற்கு இடையே இரும்புக் கம்பிகளையும் இணைத்து வைத்துள்ளனர்.

இந்நிலையில் ராகுல் காந்தி தன் ட்விட்டர் பக்கத்தில் விவசாயிகளுக்கு ஆதரவாக கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது ,”விவசாயிகளுக்கான பாலமாகத்தான் நாம் செயல் பட வேண்டும். தவிர்த்து தடைக்கல்லாக செயல்படக்கூடாது என்று கூறியுள்ளார். அரசிற்கும் விவசாய சங்கங்களுக்கும் இடையேயான பேச்சுவார்த்தை நடந்து கொண்டுதான் வருகிறது. எனினும் அதற்கு முடிவின்றி தொடர்ந்து கொண்டே செல்கிறது.

Categories

Tech |