Categories
கிரிக்கெட் விளையாட்டு

தடைக்கு பின் களமிறங்கிய ஆல்ரவுண்டர்… புதிய சாதனை படைத்து மாஸ் காட்டிய ஷாகிப்…!

தடைக்கு பின் களமிறங்கிய ஆல்ரவுண்டர் ஷாகிப் அல் ஹசன் புதிய சாதனை படைத்துள்ளார்.

சூதாட்டக்காரர்கள் அனுகியதை தெரிவிக்காதது உள்ளிட்ட மூன்று ஐசிசி ஊழல் தடுப்புச் சட்டத்தை மீறிய ஷாகிப் அல் ஹசன் சர்வதேச போட்டிகளில் விளையாட கிரிக்கெட் கவுன்சில் அவருக்கு ஒரு ஆண்டு தடை விதித்திருந்தது. அந்த தடையானது கடந்த 2020 ஆம் ஆண்டு அக்டோபரில் முடிவடைந்தது.

தடைக்காலம் முடிந்து மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான களமிறங்கிய ஷாகிப் 133 ரன்களை எடுத்து ம் 6 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இந்நிலையில் ஆல்ரவுண்டர் ஆன ஷாகிப் அல் ஹசன் புதியதொரு சாதனை படைத்துள்ளார். ஒரே நாட்டிற்கு எதிராக 6 ஆயிரம் ரன்கள் மற்றும் 31 விக்கெட்டுகளை எடுத்த ஒரே கிரிக்கெட் வீரராக திகழ்கிறார்.

பங்களாதேஷின் தமீம் இக்பால் 6714 ரன்கள் எடுத்து முதலிடத்திலும், முஷ்பிகுர் ரஹிம் 1104 ரன்கள் எடுத்து இரண்டாம் இடத்திலும் இருக்க தற்போது 170 போட்டிகளில் 6045 ரன்களைக் குவித்த ஷாகிப் மூன்றாமிடத்தில் இருக்கிறார். சர்வதேச போட்டிகளில் பாகிஸ்தான் அணியில் அதிக விக்கெட் எடுத்த வீரர் பட்டியலிலும் முன்னிலை வகிக்கிறார்.

Categories

Tech |