மதுரையில் கஞ்சாவை விற்பனை செய்த 3 நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மதுரை மாவட்டம் வண்டியூரில் சூரிய பிரகாஷ் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இவரும், அவரது நண்பர்கள் 2 பேரும் சேர்ந்து அதே பகுதியிலிருந்து கஞ்சா விற்பனை செய்துள்ளனர். இதற்கிடையே அண்ணா நகரிலிருக்கும் காவல்துறையினர் சட்டத்துக்குப் புறம்பான செயல்கள் நடைபெறாமல் இருக்க ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அப்போது இவர்கள் 3 பேரும் கஞ்சா விற்பனை செய்ததை காவல்துறையினர் கண்டுபிடித்தனர். இதனால் அவர்களை காவல்துறையினர் பிடிக்க முயன்றபோது, 3 நபர்களும் தப்பி ஓடியுள்ளனர். ஆனால் காவல்துறையினர் விடாது அவர்களை பிடித்து 3 பேரிடமிருந்த 3 கிலோ மற்றும் 300 கிராம் அளவுடைய கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர்.