தமிழ் திரை உலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது முன்னணி நடிகராக இருப்பவர் சிம்பு. சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான மாநாடு திரைப்படம் வசூல் சாதனை படைத்து வருகிறது. இரண்டு முறை காதலில் விழுந்த சிம்புவிற்கு இறுதியில் தோல்வி தான் கிடைத்தது. அதனால் திரைத்துறையில் மட்டுமே தனது கவனத்தை செலுத்தி வந்தார். ஆனால் குரலரசனுக்கு திருமணம் முடிந்து விட்டதால் ஏன் இன்னும் சிம்புவுக்கு திருமணம் செய்யவில்லை என்று அவரது பெற்றோரான ராஜேந்தர் மற்றும் உஷாவிடம் பலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இதனால் சிம்புவுக்கு விரைவில் திருமணத்தை செய்து முடிக்க வேண்டும் என்று பெங்களூரை சேர்ந்த ஒரு பெண்ணை முடிவு செய்து நிச்சயதார்த்தம் விரைவில் நடக்க இருந்துள்ளது. ஆனால் சமீபத்தில் ஈஸ்வரன் திரைப்படத்தில் சிம்புவுடன் கதாநாயகியாக நடித்த நிதி அகர்வாலுடன் சிம்புவுக்கு காதல் ஏற்பட்டுள்ளதாகவும் இருவரும் தனியாக வீட்டில் வசித்து வருவதாகவும் பல்வேறு வதந்திகள் பரவியதால் பெண் வீட்டினர் திருமணத்தை நடத்துவது பற்றி யோசித்துக் கொண்டு இருக்கின்றனர். இது டிஆர் குடும்பத்திற்கு மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.