Categories
தேனி மாவட்ட செய்திகள்

தடையில்லா சான்றிதழை வழங்க மறுத்த நிதி நிறுவனம்…. அவதியில் லாரி உரிமையாளர்…. அதிரடி உத்தரவிட்ட நுகர்வோர் கோர்ட்டு…..!!!!

லாரி உரிமையாளருக்கு தடையில்லா சான்றிதழை வழங்க மறுத்த தனியார் நிதி நிறுவனத்திற்கு ரூபாய் 1 லட்சத்து 10 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.

தேனி மாவட்டத்தின் கம்பம் பகுதியில் பரமேஸ்வரி என்பவர் வசித்து வருகிறார். இவர் லாரி உரிமையாளர் ஆவார். இவர் கடந்த 2010 ஆம் ஆண்டு தேனியில் இயங்கி வரும் தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் ரூபாய் 4,75,000 வாகன கடன் பெற்று லாரி வாங்கியுள்ளார். அதற்கான தவணையை அவர் சரியான வட்டியுடன் முழுமையாக செலுத்தி முடித்துள்ளார். அதன் பின்னர் வாகன பதிவு சான்றுக்கான தடையில்லா சான்று வழங்கப்படாமல் இருந்துள்ளது. இதனால் பரமேஸ்வரி தடையில்லா சான்றிதழை வழங்குமாறு தனியார் நிதி நிறுவனத்திடம் கேட்டபோது 25 ஆயிரத்தை செலுத்துமாறு அங்கிருந்தவர்கள் கூறியுள்ளனர். இதனால் பரமேஸ்வரி அந்தத் தொகையையும் செலுத்தியுள்ளார். ஆனால் அதன் பிறகும் அவர் தடையில்லா சான்று கொடுக்காமல் இழுத்தடித்துள்ளனர்.

இதனால் பரமேஸ்வரி தேனியைச் சேர்ந்த வக்கீல் செல்வகுமாரை நாடி, தேனி மாவட்ட நுகர்வோர் கோட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனதில் எதிர்மனுதாரர்களாக சம்பந்தப்பட்ட நிதி நிறுவனத்தின் தேனீ கிளை மேலாளர், கம்பம் கிளை மேலாளர், சென்னை பொது மேலாளர், மும்பை தலைமை அலுவலக போது மேலாளர் ஆகியோரை குறிப்பிட்டு கூறியிருந்தார். இந்த மனுவின் மீதான விசாரணை நீதிபதி சுந்தர் உறுப்பினர்கள் ரவி, அசீனா முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்துள்ளது. அதன்படி எதிர் மனுதாரர்களான நான்கு பேரும் சேர்ந்து பரமேஸ்வரிக்கான வாகன பதிவு சான்றுதலுக்கான தடையில்லா சான்ரை ஒரு மாதத்திற்குள் கொடுக்க வேண்டும் எனவும் அவரின் மன உளைச்சல் சேவை குறைபாட்டுக்கு ரூபாய் 90 ஆயிரத்தையும் வழக்கின் செலவுக்கு ரூபாய் 20 ஆயிரத்தையும் வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.

Categories

Tech |