கோவையில் தடையை மீறி விளையாண்ட ஆன்லைன் ரம்மியால் பணத்தை இழந்த டாக்ஸி ஓட்டுனர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நம் அன்றாட வாழ்க்கையில் தற்போது செல்போன் என்பது ஒரு இன்றியமையாத பொருளாக மாறிவிட்டது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் செல்போன் பயன்படுத்துகிறார்கள். அதிலும் குறிப்பாக இளம் வயதினர் பெருமளவு செல்போன் பயன்படுத்தி வருகிறார்கள். அவ்வாறு செல் போன் பயன்படுத்துபவர்கள் ஆன்லைன் ரம்மி விளையாடுவது பெரும்பாலான குடும்பங்கள் சீரழிந்து போயுள்ளன. தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே ஆன்லைன் ரம்மி பல உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன.
அதனால் ஆன்லைன் ரம்மிக்கு முழுவதுமாக தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. இதனையடுத்து தமிழக அரசு ஆன்லைன் ரம்மி க்கு தடை விதித்துள்ளது. இந்நிலையில் ஆன்லைன் ரம்மி விளையாட்டிற்கு அரசு தடை விதித்தாலும், கோவையில் தடையை மீறி திருட்டுத்தனமாக இயங்கும் ஆன்லைன் ரம்மி விளையாட்டால் 5 லட்சத்து 60 ஆயிரம் ரூபாயில் அந்த டாக்ஸி ஓட்டுனர் எல்வின் பிரடெரிக், ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் அந்த செயலிகளின் உரிமையாளர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.