Categories
உலக செய்திகள்

“தடையை மீறி இலங்கை துறைமுகத்துக்கு நுழைந்த சீன உழவு கப்பல்”…. சீனா எச்சரிக்கை…!!!!!

உளவு  கப்பல் விவகாரத்தில் இந்தியா தேவை இல்லாமல் தலையிட வேண்டாம் என சீனா  எச்சரிக்கை எடுத்துள்ளது.

சீனா தனது யுவான் வாங் 5 என்ற ஆராய்ச்சி கப்பலை இலங்கையின் ஹம்பன் தொட்டா துறைமுகத்தில் ஆறு நாட்கள் நிறுத்தி செயற்கைக்கோள் தொடர்பான ஆய்வு மேற்கொள்ள இருப்பதாக அறிவித்துள்ளது. இதற்கு இலங்கை அரசும் ஒப்புதல் அளித்தது இதற்கிடையே சீனா ஆராய்ச்சி கப்பல் என்று கூறுவது உண்மையில் ஒரு உலக கப்பல் எனவும் அது இலங்கையில் நிறுத்தப்படுவது இந்தியாவிற்கு அச்சுறுத்தல் ஏற்படும் எனவும் இலங்கை அரசிடம் இந்தியா நேரடியாக கவலையை வெளிப்படுத்தியுள்ளது.

அதனை தொடர்ந்து யுவான் வாங் 5 கப்பலின் பயணத்தை ரத்து செய்யும்படி சீனாவிடம் இலங்கை அரசு கூறி உள்ளது. இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய இலங்கை அரசை  சீனா வலியுறுத்தியிருக்கிறது. ஆனால் இலங்கை அதனை ஏற்கவில்லை இந்த சூழலில் தடையை மீறி சீனாவின் கப்பல் இலங்கையின் ஹம்பன் தொட்டால் துறைமுகத்தை நோக்கி புறப்பட்டுள்ளது. மேலும் இந்திய நேரப்படி இன்று காலை 9.30 மணிக்கு அந்த கப்பல் ஹம்பன் தொட்டா வந்து சேர்ந்ததாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

இந்த சூழலில் சீனா வெளியுறவுத்துறை வெளியிட்ட அறிக்கையில் இலங்கை என்பது இறையாண்மை கொண்ட நாடு அந்த நாட்டின் வெளியுறவு கொள்கைகளில் இந்தியா தேவை இல்லாமல் தலையிடுவது சரியல்ல. இலங்கை சீனா உறவில்  மூன்றாம் தரப்பு தலையிடுவது தேவையற்ற ஒன்றாகும். மேலும் அணிசேரா கொள்கையின்படி இலங்கை தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப எந்த நாட்டிலும் உறவு வைத்துக் கொள்ளலாம். அதனால் உளவு  கப்பல் விவகாரத்தில் இந்தியா தேவை இல்லாமல் தலையிட வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளது.

Categories

Tech |