Categories
மாநில செய்திகள்

தடையை மீறி ஊர்வலம் நடத்தினால்…. நடவடிக்கை பாயும்…. சங்கர் ஜிவால் எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் தடையை மீறி விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடத்தினால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் வரும் செப்டம்பர் 10ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. பல மாநிலங்களில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிலைகள் வைத்து ஊர்வலம் நடத்த அனுமதி வழங்கப்பட்டாலும், தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி விழா நடத்த தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, மத்திய உள்துறை அமைச்சர் அஜய் பல்லா கொரோனா 3-ம் அலை உருவாகும் சூழல் இருப்பதால், மக்கள் கூடும் வகையில் விழாக்களை நடத்த தடை விதிக்க வலியுறுத்தி உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

இதனால் தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஊர்வலம் நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடைக்கு பல அமைப்பினரும் தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தடையை மீறி விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் நடத்துபவர்கள் மீது நடவடிக்கை பாயும் என்று சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Categories

Tech |